உலகம் மாபெரும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறதென்பதே மகத்தான உண்மை..
2012 ல் உலகம் அழியும் என்று அமெரிக்கத் திரைப்படமொன்று வந்து மக்களிடையே பீதியை கிளப்பி பணத்தை அள்ளிக் கொண்டு போனது உலகறிந்த உண்மை.

2012 ல் உலகம் அழியும் என்றால் உனக்கேன் இவ்வளவு பணம்..? இந்தக் கேள்வியே அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவின் மீதான சாட்டையடியாகும்.
இதுபோல ஆரூடக்காரர் நொஸ்ரடாம் சொன்னது போலவே உலகில் எல்லாம் நடக்கிறது என்று ஒரு புரளி கிளம்பி ஓய்ந்தது..
அவர் கூறிய செய்திகளில் பல அழிந்து தெளிவில்லாமல் இருப்பதாக சடைந்து கதையை முடித்தார்கள்.
இயேசுநாதர் கேட்டுக்கொண்டே யூதாஸ் காட்டிக் கொடுத்தான் என்று ஒரு புரளியை யூதாஸ் எவாங்கலியம் கிளப்பி யூதர் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க முயன்றது.
இந்தப் பித்தலாட்டங்களின் சீரியல் வரிசையில் இப்போது வந்திருப்பதுதான்.. எதிர்வரும் 21.12.2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற கூத்தாட்டமாகும்.
இதற்கு நிபிறு பிரளயம் என்று பெயரிட்டுள்ளார்கள்.
இதற்கு அவர்கள் தரும் உதாரணம் ஒரு காலத்தில் தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயர்கள் என்ற அறிவு மிக்க இனம் வகுத்துள்ள காலக்கணிப்பு ஏடு ஆகும்.
மாயர்களின் கணிப்பின்படி பால்வெளியின் சுற்றுகையும், புவியின் பிரயாணக்காலமும் 21.12.2012ல் முடிவடைகிறது, அது முடிவடையும் காலம் மாயர்கள் கணித்த கணிப்பில் இருக்கிறது என்றும் கூறுகிறது.
தென்னமெரிக்கப் பகுதியில் வாழ்ந்த இந்த இனத்தினர் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும், பல விசித்திர கட்டிடங்களை கட்டி, வானியல் அவதானிப்புக்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார்கள் என்றும் கூறுகிறது.

ஆகவே இவர்களின் கணிப்பின்படி பார்த்தால் 21.12.2012 ல் உலகம் அழியும், அல்லது ஸ்தம்பித்து நிற்கும் என்று உலகளாவிய பாமர மக்கள் மனதில் பீதி கிளப்பப்பட்டுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் ஆவி, பேய் போன்ற பித்தலாட்டங்களின் வரிசையில் இது அரங்கேறியுள்ளது.
கேள்வி 01 :
இதே தென்னமெரிக்காவில் மாயர்கள் வாழ்ந்த பகுதியில்தான் ஒரு காலத்தில் மிகப்பெரிய நரபலி நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவராக வரவழைக்கப்பட்டு வருடத்தில் ஒரு நாள் தலைகள் வெட்டி நரபலி கொடுக்கப்பட்டும் வந்தது.. ஏன் தெரியுமா..?
அப்படி நரபலி கொடுக்காவிட்டால் சூரியன் வானத்தில் தொடர்ந்து வராது என்று கருதினார்கள்… ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்காமல் நிறுத்தியபோது சூரியன் வானில் வரக்கண்டார்கள்…
இதுதான் தென்னமெரிக்க அறிவியல் சரித்திரத்தில் முக்கிய வேராக இருக்கிறது, இந்தக் கோமாளித்தனத்தையே கண்டறிய முடியாதவர்கள்தான் மாயர்கள்.
கேள்வி 02 :
புவி அழியப் போகிறது என்று கூறும் மாயர்களுக்கு அது எப்பொழுது தோன்றியது என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை… தோற்றத்தை துல்லியமாகக் கணிக்க முடியாத ஒருவன் முடிவை சரியாகக் கணிப்பான் என்று எதை வைத்து நம்புவது..?
கேள்வி 03 :
பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த உலக மக்கள் இல்லை புவிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை அறிந்ததே மாயர்களுக்குப் பின்தான்.

நவக்கிரகங்களே கண்டறியப்பட்டதும் மிகவும் பிற்பட்ட காலத்தில்தான், மொத்தக் கிரகங்களின் சரியான தொகை தெரியாத கணிப்புக்கள் அனைத்தும் பிழையானவை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
கேள்வி 04 :
ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை எல்லாக் கேள்விகளுக்கும் விடை தந்துள்ளது. புவி என்பதும் சூரியன் என்பதும், பால்வெளி என்பதும் தனித்தனியானதல்ல அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒன்றோடு ஒன்று பின்னி நிற்பதுதான் சார்பியல் கொள்கை.

அதன்படி பார்த்தால் புவிக்கான காலக்கணிப்பு என்பது பயனற்ற வேலை.
ஒளி வளையும், அது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் என்பதைக் கண்டு பிடித்தவரும் ஐன்ஸ்டைன்தான்.
சார்பியல் கொள்கையின்படி புவி மட்டும் தனியே அழிய வேண்டிய தேவை இல்லை..
மேலும்..
2000 ம் ஆண்டில் உலகம் அழியும் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இன்னமும் உலகில் உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்கள் தமது மடைத்தனத்தை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.
உலகம் என்பது ஒற்றை நொடிக்குள் சுழன்று கொண்டிருப்பது, எதிர் காலமும், கடந்த காலமும் அதற்குக் கிடையாது.
எல்லாவற்றையும் புறந்தள்ளி அது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று நாம் காணும் உலகத்தைவிட அற்புதமான உலகமாக அது மாறும், மிகச்சிறந்த பெருமைதரும் கிரகமாக அது நிலைபேறு பெறும்…
இதில் எவருமே சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை..
பிரபஞ ;ச இரகசியத்தை கண்டறிந்தவர் எவரும் இல்லை…
உலகம் அழியப்போகிறது, அழிவு வரப்போகிறது என்று கதை கட்டுபவன் பக்காத்திருடனாகவும் இருக்கலாம் என்பதை கண்டு பிடிப்பதற்காகவேநமது உடம்பின் மேற்பகுதியில் 1200 கிராம் அளவில் மூளை படைக்கப்பட்டுள்ளது.

நிபிறு பிரளயமா என்று சிரித்தபடி 22.12.2012 லும் புவி சிரித்தபடி சுழலும்.. தென்னமெரிக்காவில் நரபல கொடுக்காமல் விட்டபின்னும் விண்ணில் வந்த சூரியன் போல அன்றும் சூரியன் தெரிவான்..
s.ravikumar
thanks
alaikal.comhttp://my.opera.com/skrravee/blog/
No comments:
Post a Comment