Monday, 17 December 2012

உலகம் அழியுமா..? பித்தலாட்டங்கள்…


உலகம் மாபெரும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறதென்பதே மகத்தான உண்மை..

2012 ல் உலகம் அழியும் என்று அமெரிக்கத் திரைப்படமொன்று வந்து மக்களிடையே பீதியை கிளப்பி பணத்தை அள்ளிக் கொண்டு போனது உலகறிந்த உண்மை.

2012 ல் உலகம் அழியும் என்றால் உனக்கேன் இவ்வளவு பணம்..? இந்தக் கேள்வியே அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவின் மீதான சாட்டையடியாகும்.

இதுபோல ஆரூடக்காரர் நொஸ்ரடாம் சொன்னது போலவே உலகில் எல்லாம் நடக்கிறது என்று ஒரு புரளி கிளம்பி ஓய்ந்தது..

அவர் கூறிய செய்திகளில் பல அழிந்து தெளிவில்லாமல் இருப்பதாக சடைந்து கதையை முடித்தார்கள்.
இயேசுநாதர் கேட்டுக்கொண்டே யூதாஸ் காட்டிக் கொடுத்தான் என்று ஒரு புரளியை யூதாஸ் எவாங்கலியம் கிளப்பி யூதர் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க முயன்றது.

இந்தப் பித்தலாட்டங்களின் சீரியல் வரிசையில் இப்போது வந்திருப்பதுதான்.. எதிர்வரும் 21.12.2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற கூத்தாட்டமாகும்.

இதற்கு நிபிறு பிரளயம் என்று பெயரிட்டுள்ளார்கள்.
இதற்கு அவர்கள் தரும் உதாரணம் ஒரு காலத்தில் தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயர்கள் என்ற அறிவு மிக்க இனம் வகுத்துள்ள காலக்கணிப்பு ஏடு ஆகும்.

மாயர்களின் கணிப்பின்படி பால்வெளியின் சுற்றுகையும், புவியின் பிரயாணக்காலமும் 21.12.2012ல் முடிவடைகிறது, அது முடிவடையும் காலம் மாயர்கள் கணித்த கணிப்பில் இருக்கிறது என்றும் கூறுகிறது.
தென்னமெரிக்கப் பகுதியில் வாழ்ந்த இந்த இனத்தினர் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும், பல விசித்திர கட்டிடங்களை கட்டி, வானியல் அவதானிப்புக்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார்கள் என்றும் கூறுகிறது.

ஆகவே இவர்களின் கணிப்பின்படி பார்த்தால் 21.12.2012 ல் உலகம் அழியும், அல்லது ஸ்தம்பித்து நிற்கும் என்று உலகளாவிய பாமர மக்கள் மனதில் பீதி கிளப்பப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் ஆவி, பேய் போன்ற பித்தலாட்டங்களின் வரிசையில் இது அரங்கேறியுள்ளது.

கேள்வி 01 :

இதே தென்னமெரிக்காவில் மாயர்கள் வாழ்ந்த பகுதியில்தான் ஒரு காலத்தில் மிகப்பெரிய நரபலி நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவராக வரவழைக்கப்பட்டு வருடத்தில் ஒரு நாள் தலைகள் வெட்டி நரபலி கொடுக்கப்பட்டும் வந்தது.. ஏன் தெரியுமா..?
அப்படி நரபலி கொடுக்காவிட்டால் சூரியன் வானத்தில் தொடர்ந்து வராது என்று கருதினார்கள்… ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்காமல் நிறுத்தியபோது சூரியன் வானில் வரக்கண்டார்கள்…
இதுதான் தென்னமெரிக்க அறிவியல் சரித்திரத்தில் முக்கிய வேராக இருக்கிறது, இந்தக் கோமாளித்தனத்தையே கண்டறிய முடியாதவர்கள்தான் மாயர்கள்.

கேள்வி 02 :

புவி அழியப் போகிறது என்று கூறும் மாயர்களுக்கு அது எப்பொழுது தோன்றியது என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை… தோற்றத்தை துல்லியமாகக் கணிக்க முடியாத ஒருவன் முடிவை சரியாகக் கணிப்பான் என்று எதை வைத்து நம்புவது..?

கேள்வி 03 :

பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த உலக மக்கள் இல்லை புவிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை அறிந்ததே மாயர்களுக்குப் பின்தான். 
நவக்கிரகங்களே கண்டறியப்பட்டதும் மிகவும் பிற்பட்ட காலத்தில்தான், மொத்தக் கிரகங்களின் சரியான தொகை தெரியாத கணிப்புக்கள் அனைத்தும் பிழையானவை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

கேள்வி 04 :

ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை எல்லாக் கேள்விகளுக்கும் விடை தந்துள்ளது. புவி என்பதும் சூரியன் என்பதும், பால்வெளி என்பதும் தனித்தனியானதல்ல அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒன்றோடு ஒன்று பின்னி நிற்பதுதான் சார்பியல் கொள்கை. 

அதன்படி பார்த்தால் புவிக்கான காலக்கணிப்பு என்பது பயனற்ற வேலை.
ஒளி வளையும், அது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் என்பதைக் கண்டு பிடித்தவரும் ஐன்ஸ்டைன்தான்.
சார்பியல் கொள்கையின்படி புவி மட்டும் தனியே அழிய வேண்டிய தேவை இல்லை..
மேலும்..

2000 ம் ஆண்டில் உலகம் அழியும் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இன்னமும் உலகில் உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்கள் தமது மடைத்தனத்தை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.
உலகம் என்பது ஒற்றை நொடிக்குள் சுழன்று கொண்டிருப்பது, எதிர் காலமும், கடந்த காலமும் அதற்குக் கிடையாது.

எல்லாவற்றையும் புறந்தள்ளி அது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று நாம் காணும் உலகத்தைவிட அற்புதமான உலகமாக அது மாறும், மிகச்சிறந்த பெருமைதரும் கிரகமாக அது நிலைபேறு பெறும்…
இதில் எவருமே சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை..

பிரபஞ ;ச இரகசியத்தை கண்டறிந்தவர் எவரும் இல்லை…
உலகம் அழியப்போகிறது, அழிவு வரப்போகிறது என்று கதை கட்டுபவன் பக்காத்திருடனாகவும் இருக்கலாம் என்பதை கண்டு பிடிப்பதற்காகவேநமது உடம்பின் மேற்பகுதியில் 1200 கிராம் அளவில் மூளை படைக்கப்பட்டுள்ளது. 



நிபிறு பிரளயமா என்று சிரித்தபடி 22.12.2012 லும் புவி சிரித்தபடி சுழலும்.. தென்னமெரிக்காவில் நரபல கொடுக்காமல் விட்டபின்னும் விண்ணில் வந்த சூரியன் போல அன்றும் சூரியன் தெரிவான்..
s.ravikumar
thanks
alaikal.comhttp://my.opera.com/skrravee/blog/

Monday, 6 February 2012

குழந்தை வளர்ப்பில் இந்திய முறை சிறந்ததா? மேற்கத்திய முறை சிறந்ததா?


அபிக்யானுக்கு மூன்று வயது. அவன் தங்கை ஐஸ்வர்யாவுக்கு ஒரு வயது. அந்தக் குழந்தைகளின் நலனுக்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதலில் பேசினார். பிறகு வலியுறுத்தினார். பின்னர் நன்றி தெரிவித்தார்.
இந்தியர்களான அனுருப் பட்டாச்சார்யா-சகாரிகா இணையர் நார்வேயில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களின் இரு குழந்தைகளையும் நார்வே நாட்டின் குழந்தை வளர்ப்பு சட்டவிதிகளுக்குப்ட்டு வளர்க்கவில்லை என்று அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின்படி, இரண்டு குழந்தைகளையும் அரசாங்க காப்பகத்திற்குக் (பார்னேவார்னே எனப்படும் குழந்தைகள் நல சேவை மையம்) கொண்டு சென்றுவிட்டார்கள். பட்டாச்சார்யாவின் பூர்வீகம் மேற்குவங்காளம். அதன் தலைநகர் கொல்கத்தாவில் வசிக்கும் அவருடைய பெற்றோர் மோனோடோஷ் சக்ரவர்த்தியும் ஷிகாவும் தங்கள் பேரப்பிள்ளைகளை மீட்டுத் தருமாறு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து முறையிட்டதும், இந்த விவகாரம் ஊடக விவாதமாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வேயின் வெளியுறவு அமைச்சரான ஜோனஸ் கார்ஸ்டோரிடம் பேசி, உடனடியாகவும் உடன்பாடானதுமான ஒரு தீர்வை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் அந்நாட்டு அதிகாரிகள் பேசினர். இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சித்தப்பாவான அருணாபாஷ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைப்பது என, குழந்தைகளின் பெற்றோர் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தனர். கொல்கத்தாவில் உள்ள அருணாபாஷை இந்திய அரசாங்கத்தின் செலவில் நார்வேக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து வருவது என்றும் இரண்டு குழந்தைகளுக்கும் 18 வயதாகும்வரை அவர்தான் காப்பாளர் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர் என்ற உரிமையுடன் அனுருப்பும் சகாரிகாவும் தங்கள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றும் நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்காகத்தான் நார்வே வெளியுறவு அமைச்சருக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.
அந்த இரண்டு குழந்தைகளையும் அரசாங்கக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நார்வே நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது? இங்குதான் இந்தியாவின் குடும்ப அமைப்புமுறை-குழந்தை வளர்ப்பு முறை ஆகியவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளின் முறைக்குமான வேறுபாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றன.
சின்னவயதில் நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய தாயை நினைத்து நினைத்து கவிஞர்கள் உருக்கமான கவிதை எழுதுவது இந்திய மரபு. தாயின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட உணவை அவளது கையாலேயே ஊட்டும்போது குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. மேற்கத்திய நாட்டின் நிலைமை வேறு. நார்வேயில் குழந்தைகளுக்குத் தாய் தன் கையால் சோறு ஊட்டினால் அது ஆரோக்கியக் கேடு. தாயின் உடலில் ஏதேனும் நுண்கிருமிகள் இருந்தால் அதுவும் குழந்தைக்கு ஊட்டப்படும் சோறுடன் சேர்த்து வயிற்றுக்குள் போய்விடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அங்கே நிலவுகிறது. நார்வேயில் உள்ள இந்தியத் தாய் தன் குழந்தைகளுக்குக் கையால் சோறு ஊட்டியதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் அதன்பின் தன் குழந்தையை நெஞ்சிலும் மடியிலும் சுமப்பது இந்திய வழிமுறை. வளர்ந்து ஆளானபிறகும் எனக்கொரு தாய்மடி கிடைக்குமா என்று ஏங்குவது பிள்ளைகளின் வழக்கம். படுக்கும்போது தங்களுக்குப் பக்கத்தில் குழந்தைகளைப் படுக்கவைத்துக்கொண்டு அரவணைத்தபடியே தூங்குவர் இந்தியப் பெற்றோர். அங்கே நிலைமை வேறு. குழந்தைகள் படுப்பதற்கென வீட்டில் தனி இடம் இருக்கவேண்டும். அதுதான் குழந்தை எந்தவித நெருக்கடியுமில்லாமல் வசதியாகத் தூங்குவதற்குரியதாக இருக்கும் என்கிறது நார்வே நாட்டின் சட்ட திட்டம்.
அதுபோலவே, குழந்தைகள் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் வீட்டுக்குள் போதுமான இடவசதி இருக்கவேண்டும் என்கிறது நார்வே அரசாங்கம். நம் ஊரில் பெரும்பாலான வீடுகளில் இருக்கிற வசதியைக் கொண்டே படிக்கவேண்டிய நிலைமை. கல்விக்கடவுளான சரஸ்வதிக்கும் ஏனைய கடவுள்களுக்கும் வீட்டுக்குள் பூஜை அறை நிச்சயம் இருக்கும். படிப்பதற்கென்று தனி அறை ஒதுக்கும் பழக்கம் மிகத் தாமதமாகவே நம்மிடம் ஏற்பட்டுள்ளது.
நமது குழந்தை வளர்ப்பு முறைப்படி, பண்டிகை நாட்களில் டி.வியில், ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ என்ற பெருமையுடன் அருந்ததி படத்தையோ, முனி படத்தையோ அதன் இரண்டாம் பாகம் எனப்படும் காஞ்சனாவையோ போட்டால் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து விதம் விதமாக வந்து போகும் கிராஃபிக்ஸ் பேய்களை ரசிக்கலாம். செத்து செத்த விளையாடலாமா என்று வடிவேலுவிடம் முத்துக்காளை கேட்பதுபோல.
நார்வே நாட்டில் இப்படி செத்துச் செத்தெல்லாம் விளையாட முடியாது. குழந்தைகளின் பொழுதுபோக்கு-அவர்களுக்கான விளையாட்டு-அந்த விளையாட்டுக்கான பொம்மைகள் இவை பற்றியெல்லாம் அரசின் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. பட்டாச்சார்யா தம்பதிகள் வசிக்கும் வீடு குழந்தைகள் விளையாடுவதற்கான வசதியுடன் இல்லை என்றும், அவர்கள் படுப்பதற்கென தனி பெட் இல்லை என்றும் அவர்களின் வயதுக்குப் பொருந்தாத விளையாட்டு பொம்மைகளைப் பெற்றோர் வாங்கித் தந்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுத்தான் குழந்தைகளைக் காப்பகத்திற்குக் கொண்டு சென்றது நார்வே அரசு.
இப்படியான ‘கொடுமை’யானக் குற்றங்களை சுமத்தி, அபிக்யானையும் ஐஸ்வர்யாவையும் அரசாங்கக் காப்பகத்திற்குக் கொண்டு போய்விட்டார்கள் என்பதுதான் இந்தியத் தரப்பின் குற்றச்சாட்டு.
தான் பெற்ற குழந்தையை வளர்க்க அதன் தாய்க்குத் தெரியாதா என்பது இந்தியர்களின் கேள்வி. குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்ற சட்டவிதிகள் இருப்பது தாய்க்குத் தெரியாதா என்பது நார்வே தரப்பின் கேள்வி. ஊடகப் பட்டிமன்றங்கள் இங்கிருந்துதான் தொடங்கின.
மேற்கத்திய நாட்டுக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோரிடம் அதிகப் பற்றுடன் இருக்கின்றன என்று ஒரு தரப்பினரும், இந்தியாவில் வாழ விருப்பமில்லாமலோ- வாழும் சூழல் இல்லாமலோ- அல்லது இதைவிட நல்ல வசதியாக வாழலாம் என்றோ நார்வே சென்ற தம்பதியினர் அந்த நாட்டு சட்டப்படி குழந்தைகளை வளர்ப்பதுதானே முறையாக இருக்கும் என இன்னொரு தரப்பினரும் அனல்பறக்கும் வாதங்களை எழுப்பி வருகின்றனர்.
பட்டாச்சார்யாக்களின் குரல் இந்திய அரசாங்கத்தின் காதுகளில் பலமாக ஒலிக்க வைக்கப்பட்டதால், அந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் சித்தப்பாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் இந்த பட்டிமன்ற விவாதங்களைக் கடந்த இப்போதைய ஆறுதல். இனி நீங்கள் சொல்லுங்கள்… குழந்தை வளர்ப்பில் இந்திய முறை சிறந்ததா? மேற்கத்திய முறை சிறந்ததா?

உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே..

Sunday, 22 January 2012

பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்!





1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.http://www.facebook.com/skrravee

கைதொழில் கற்ற ஆசையா SAREE ROLLING AND STARCHING ANDPOLISHING TRAINING CONTACT: R.SUMATHI. PHONE:9444084594http://handskrsumathi.blogspot.com/

Thursday, 22 December 2011

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம். UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், 
மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், 
கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், 
ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், 
மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், 
இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: 
பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது 
சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது.


உறுப்புரை 1 
மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.


உறுப்புரை 2 
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். 
மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது.


உறுப்புரை 3 
வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர்.


உறுப்புரை 4 
எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம்.


உறுப்புரை 5 
எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது.


உறுப்புரை 6 
ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 7 
எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.


உறுப்புரை 8 
அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள்.


உறுப்புரை 9 
ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 10 
அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர்.


உறுப்புரை 11 
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.


உறுப்புரை 12 
ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 13 
1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 
2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.


உறுப்புரை 14 
1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.


உறுப்புரை 15 
1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.


உறுப்புரை 16 
1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.


உறுப்புரை 17 
1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.


உறுப்புரை 18 
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.


உறுப்புரை 19 
கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.


உறுப்புரை 20 
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 
2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 21 
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும்.


உறுப்புரை 22 
சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர்.


உறுப்புரை 23 
1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 
2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 
3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.


உறுப்புரை 24 
இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும்.


உறுப்புரை 25 
1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன.


உறுப்புரை 26 
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 
3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு.


உறுப்புரை 27 
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.


உறுப்புரை 28 
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.


உறுப்புரை 29 
1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.


உறுப்புரை 30 
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

Tuesday, 8 November 2011

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு

குடி, குடிமக்கள், சட்டம்

‘குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு:

போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.

தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று.

பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..

மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.

மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.

தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு:

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்:

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன.

மீண்டும் மது விலக்கு:

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003:

‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது.

மது விலக்கு கோரி வேண்டுகோள்:

கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது.

தமிழ் சினிமாவில் மது விலக்கு:

1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மதுவினால் விளையும் தீமைகள்:

மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.

“மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.
மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.http://rmlcollegestudentbangalouruniversity.blogspot.com/

Saturday, 29 October 2011

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


தமிழ் நாடு அரசு
தேர்தல் துறை
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த ஒரே உரிமை ஓட்டுரிமை. பலரும் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி பதினெட்டு வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டியதும் நாம் தான். முதலில் உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து கொள்ளுங்கள். 

இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் எனவே உங்கள் பெயர்களை இந்த நேரத்தில் நீங்கள் சரி பார்த்து கொண்டால் உங்கள் உரிமையை நீங்கள் நிலை நாட்டலாம். தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் கடைசியாக புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் .  

தமிழில் தேட இந்த இணைப்பில் செல்லலாம்   இந்த இணைப்பில் சென்று உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி நீங்கள் தேர்வு செய்து உங்கள் பெயர்கள் இருக்கிறதா என்றும் பார்க்கலாம். 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள் http://www.elections.tn.gov.in/eroll/



reg.
ravi.